ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள்
here attached PDF 👉SHRI MUTHUKRISHNA SWAMIGAL
திருநெல்வேலி
மாவட்டம் வள்ளியூரில் அமைந்த சூட்டுப்பொத்தை குன்றின்
அடிவாரத்தில் வாழ்ந்து அற்புதங்கள் நிகழ்த்தி அருளாட்சி செய்தவரே ஸ்ரீ
முத்துகிருஷ்ண சுவாமிகள். சுவாமிகள் கி.பி 1734 இல் பிறந்து கி.பி 1913 வரை 179 ஆண்டுகள்
ஸ்தூல திருமேனியுடன் நடமாடியவர். சுவாமிகள் குள்ளமான உருவம் உடையவராதலால்
அகத்தியரின் அவதாரமாகவே அப்பகுதி மக்களால் கருதப்பட்டார். பொத்தை மலை அடிவாரத்தில்
வாழ்ந்து வந்த சுவாமிகள் அன்பர்கள் கொடுக்கும் பழவகைகளை அன்பர்களுக்கே
விநியோகிப்பார். சகல சித்திகளும் கைவரப் பெற்ற சுவாமிகள் தினமும் மாலை சூட்டுப்
பொத்தை மலை உச்சியில் நின்று திருச்செந்தூர் முருகனுக்கு நடைபெறும் சாயரட்சை
பூஜையினை தரிசிப்பார்.
ஒரு முறை
வள்ளியூர் போலீசார், சுவாமிகள் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஐயுற்று
விசாரணைக்காக அழைத்து வந்தனர். சம்பூத்து என்னும் இடத்தருகே வரும்போது சுவாமிகள் நீர் அருந்த வேண்டுமெனக் கூறி
ஊற்றில் நீரருந்தினார். அந்த நிலையிலேயே காவலர்கள் பார்வையிலிருந்து மறைந்தார்.
காவலர்கள் திகைத்து நிற்கும் போது சங்கு ஊதும் ஒலி கேட்டது. ஓசை வந்த திக்கில்
பார்க்கும் போது, மனிதர்கள் எளிதாகவும் விரைவாகவும் ஏற முடியாத பொத்தை மலை
உச்சியில் நின்றபடி சுவாமிகள் சங்கநாதம் முழங்கிக் கொண்டிருந்தார்கள். இக்காட்சியை கண்ட காவலர்கள் நடுக்கம் உற்று, சித்தரை தவறாக எண்ணினோமே என வருந்தி , சித்தரை நோக்கி வணங்கிச் சென்றனர்.
சித்தர் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகையன்று பொத்தைமலை உச்சியில் தீபம்
ஏற்றுவார்கள். ஒருமுறை அப்பகுதியில் மாடு
மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் தங்களையும் மலை உச்சிக்கு அழைத்துச் செல்ல
வேண்டினர். சிறுவர்கள் மீது இரக்கம் கொண்ட
சுவாமிகள் தமது கைகளை பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளச் சொன்னாரகள்.
சிறுவர்களும் அப்படியே செய்தனர். சுவாமிகள் சொன்னதும் சிறுவர்கள் கண்களைத் திறந்ததும் தாம் மலை உச்சியில்
இருப்பதை அறிந்தனர். மீண்டும் அவ்வாறே செய்ய
மலையடிவாரம் வந்தனர். இவ்வாறு, பல அற்புதங்கள் செய்து அப்பகுதியில் அருள் புரிந்து
வந்த சுவாமிகள் தமது 179 வது வயதில் கிபி 1913ஆம் வருடம்
கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று அன்பர்கள் புடைசூழ ஜீவசமாதியில்
ஆழ்ந்தார்கள்.
இன்று சுவாமிகளின் சமாதி வளாகத்தில் “ஸ்ரீ முத்துகிருஷ்ணசுவாமி மிஷன் அறக்கட்டளை” இயங்கி வருகிறது. அங்கு தினமும் அன்னதானம்
வழங்கப்படுகிறது. இலவச மருத்துவ சேவையும்
வழங்கப்படுகிறது. இலவச கல்வி நிலையமும், இலவச கலாச்சார மேம்பாட்டு மையமும் இயங்கி வருகின்றன.
சமாதிக் கோயில் உள்ள இடம்
திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும்
வழியில் அமைந்துள்ளது வள்ளியூர். வள்ளியூரில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் ஏர்வாடி செல்லும்
சாலையில் சென்று மேற்கே திரும்பினால் சூட்டுப்பொத்தை மலைக்குன்றும் அதற்குச் சற்று முன்னால் சாமியார் பொத்தை எனும்
குன்றும் உள்ளன. சாமியார் பொத்தைக்குத் தென்பால் “ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளை”
எனும் பெயர் பொறித்த ஆசிரம வளாகம் உள்ளது. அங்கு பெரிதாக விசாலமான அழகிய கூடத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ணன் சாமியின் சமாதி
மேடை உள்ளது. மேடைமீது மகாமேரு பிரதிஷ்டை. கிழக்கு பார்த்த சன்னதி.
சன்னதி திறந்திருக்கும் நேரம்: காலை 9.30 மணி முதல் 1 மணி வரை. மாலை 4.0 மணி முதல் 7.0 மணி வரை.
முகவரி:
ஸ்ரீ
முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளை, ஸ்ரீபுரம், சாமியார் பொத்தை, ஏர்வாடி ரோடு, வள்ளியூர். பின்கோடு 627117.
1 Comments:
Click here for Commentsஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி அவர்களின் அருள் கிடைக்கவ் வேண்டிக்கொள்கிறேன்....🙏
ConversionConversion EmoticonEmoticon