கோபுர தரிசனம்


 👉திருக்கானப்பேர் - திருக்கானப்பேரூர் (காளையார்கோயில்)

🌼காளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர் சுவாமி உடனுறை 

சொர்ணவல்லி, சௌந்தர நாயகி, மீனாட்சியம்மன் திருக்கோவில். 


தல மரம்:🌳
மந்தாரை& வில்வம்.
தீர்த்தம் :💦
கஜபுஷ்கரணி (ஆனைமடு), சிவகங்கைக்காளி, விஷ்ணு, சரஸ்வதி, கௌரி, ருத்ர, லட்சுமி, சுதர்சன.
வழிபட்டோர்:🙏
சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், சேக்கிழார், ஐராவதம் முதலியோர்.
🌼இறைவன் காளைவடிவங்கொண்டு கையிற் பொற்செண்டும் திருமுடியில் சுழியுங்கொண்டு சுந்தரருக்குக் காட்சி தந்து " யாம் இருப்பது கானப்பேரூர் " என்று கூறி ஆற்றுப்படுத்திய தலம்.
🌼நந்தியிடம் சாபம் பெற்ற ஐராவதம் இங்கு வந்து ஆனைமடு தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கப் பெற்றதாகவும் வரலாறு.
🌼தக்ஷிணகாளிபுரம், சோதிவனம், மந்தாரவனம், மோக்ஷப்பிரதம், அகத்தியக்ஷேத்ரம், காந்தாரம், தவசித்திகரம், வேதாருவனம், பூலோககைலாயம், மகாகாளபுரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
🌼திருஞானசம்பந்தர்
🌼சுந்தரமூர்த்தி சுவாமி
பதிகங்கள் அருளியுள்ளனர்
Previous
Next Post »