நேர்க்கோட்டில் - சிவாலயங்கள்


ஒரே  நேர்க்கோட்டில் அமைந்த எட்டு சிவாலயங்கள்  - ஓர் ஆச்சரியம்

                         
                                           


நாம் வணங்கும் இறைவன் சிவபெருமான் நம்மில் மட்டுமில்லாமல் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பவன். அண்டசராசரங்களின் முக்கிய சாராம்சமாக இருப்பவன். நாம் தோல்வியில் துவளும் போது மனதில் நம்பிக்கையை விதைப்பவன். அதனால்தான் இறைவன் எங்கு இருப்பான்? என்ற கேள்விக்கான விடை தேடும் அன்பர்களுக்கு பிரகலாதனை காரணமாகக் கொண்டு தான் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று உணர்த்தி இருக்கிறான். இறைவன் மெய்ஞான ரகசியங்களை முழுவதும் அறிந்து கொள்வதற்கு மனிதனுக்கு பல யுகங்கள் கூட போதாது என்பதிலிருந்தே அவனுடைய அளவற்ற ஆற்றலை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.பொதுவாக புவியியலில் கூறப்படும் தீர்க்க ரேகைகள் என்பவை பூமியின் மேல் பகுதியில் மேற்கிலிருந்து கிழக்கு திசையை நோக்கி வரையப்படும் கற்பனைக் கோடுகள் என்றும் அட்ச ரேகைகள் என்பவை பூமியின் மேல் பகுதியில் வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி வரையப்படும் கற்பனைக் கோடுகள் எனவும் வரையறுக்கப்படுகின்றன. இவை குறிப்பாக ஒரு ஊரை , இடத்தை சுட்டிக் காட்டுவதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன.

இன்று நம்மிடம் ஒரு ஆண்ட்ராய்டு மொபைலும் அது தக்க இடத்தை கண்டறியும் ஆப் போன்றும் இருந்தால் நாம் தேட இருக்கும் இடத்தை அதன் நிலவியல் கூறுகளோடு எளிதில் வகைப்படுத்தி விட முடியும்.ஆனால் அது பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாத காலத்தில் நம் இந்தியர்கள் எம்பெருமான் சிவனுக்கு ஒரே நேர்கோட்டில் கோயில் எழுப்பி வழிபட்டு உள்ளனர் என்பது நம்மில் பலரும் அறிந்திடாத உண்மையே .ஆம், அவர்கள் கட்டுவித்த சிவாலயங்களில் சராசரியான தீர்க்கரேகை மதிப்பு 70 டிகிரி இருக்கிறது என்றால் ஆச்சரியம்தானே! இப்படி ஒத்த புள்ளியில் அமைக்கப்பட்ட பஞ்சபூதத் தலங்கள் பற்றியும் இன்ன பிற முக்கிய சிவன் கோயில்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். 


 1. ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி திருக்கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இத்தலத்தில் ராவணனை கொன்ற பாவம் நீங்க ராமன் சிவனை கடல் மணலில் லிங்கம் அமைத்து வழிபட்டதாகக் கூறுவர் இந்த திருத்தலம் அமைந்துள்ள கோயிலின் ரேகை மதிப்பு -9° 17'17.18"N,79°19'2.21"E 

  2.  திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் அமைந்திருக்கிறது ஜம்புகேஸ்வரர் ஆலயம் பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரியது என வர்ணிக்கப்படும் தலமிது முன் ஜென்மத்தில் சிலந்தியாக பிறந்த கோச்செங்கட்சோழனின் சிவபக்தி மாமன்னர் ஆகியும் தொடரவே அவன் ஆட்சியில் கட்டுவித்த முதல் பெருங்கோவில் இது இந்த திருத்தலம் அமைந்துள்ள கோயிலின் ரேகை மதிப்பு-10°51'12"N,78°42'20"E. 

 3. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரத்தில் அமைந்திருக்கிறது நடராஜர் ஆலயம் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்துக்கு ஏற்ற தலம் என வர்ணிக்கப்படுகிறது இங்கு சமயக்குரவர்கள் ஆன அப்பர் சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவாரம் பாடியுள்ளனர் இந்த திருத்தலம் அமைந்துள்ள கோயிலின் ரேகை மதிப்பு-11°24'0"N,79°42'0"E 

 4. திருவண்ணாமலையில் எல்லாம் வல்ல இறைவன் ஜோதி பிழம்பாக அருணாச்சலேஸ்வரர் ஆக அருள்பாலிக்கிறார் பஞ்சபூத தளத்தில் அக்னி தலமாக இதைக் கருதுகின்றனர் இங்கு அன்னை உண்ணாமலை ஆக வீற்றிருக்கிறாள் இத்தளத்தின் ரேகை மதிப்பு-12° 13'53.76"N,79° 4'1.92"E 

 5. பிரித்திவி இலிங்கம் அருளும் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலும் வான்மீகி நாதர் அருள்புரியும் திருவாரூர் தியாகராஜர் கோயிலும் பஞ்சபூத தலங்களில் நிலத்தை குறிப்பன இத்தளத்தின் ரேகை மதிப்புகள் முறையே-12° 50'51"N,79° 42'0"E மற்றும் -10° 46"0'N,79° 39.'0"E 

 6. ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் ஸ்ரீகாளகஸ்தி பஞ்ச பூத தலங்களில் வாயு லிங்கம் என அழைக்கப் படுகிறது இத்தளத்தின் ரேகை மதிப்பு - 13°44'58''N, 79°41'54''E.

 7. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கிறது காலேஸ்வரம் முக்தீஸ்வரர் திருக்கோவில் இத்தலத்தின் ரேகை மதிப்பு - 18°48'41''N , 79°54'24'' E

 8. உத்தரகாண்ட் மாநிலத்தில் மந்தாகினி நதி கரையில் அமைந்திருக்கும் நகரம் கேதார்நாத் இங்கு இருக்கும் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்திருக்கிறது இந்த பனிலிங்கம் ஆலயம் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இங்கு நிலவும் பணியின் காரணமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் . இத்தலத்தின் ரேகை மதிப்பு - 30° 43' 48''N, 79° 4' 12'' E.


 
ஆக நம் முன்னோர்கள் கட்டமைத்த ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னும் பல ஆண்டுகளை தாண்டி நிற்கும் அறிவியல் நிற்கிறது அந்த அறிவியலுடன் ஆன்மீகமும் பிணைந்திருக்கிறது இப்படி பல முன்னோர்கள் வகுத்த விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் கொண்டாட பழகுவோம் பல ஆச்சரியங்களை மதிப்போம்...
Previous
Next Post »

1 Comments:

Click here for Comments
Sathish
admin
June 21, 2021 at 7:12 PM ×

Nice information

Congrats bro Sathish you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar