ஏழை எளியவர்களிடமும்,ஆதரவற்றவரிடமும், பலவீனர்களிடமும், நோயுற்றவர்களிடமும் , அன்பை காட்டுபவனே தன்னுள் உள்ள இறை உணர்வை உணர்கிறான் .
விக்கிரகத்தில் மட்டுமே கடவுளைக் காணும் வழிபாடு முழுமையற்ற தாகும். தன்னுடைய தேவைக்கும், ஆசைக்கும் மட்டுமே வழிபாடு நடத்தும் வீண் பக்தி ஆரம்ப நிலையில் உள்ளது.பிறர் துன்பங்களை தன் துன்பங்களாகக் கருதி வாழ்ந்தவர்கள் சித்த புருஷர்கள் ஆவர் . திருச்சி உறையூரில் வெங்கடாசலம் பிள்ளைக்கும் பருவ தம்மை என்கிற நல்வாழ்வுக்கும் இரண்டாவது பிள்ளையாக 1901 ஆண்டும் ஆடி மாதம் 13ஆம் தேதி (28.07.1901) ஞாயிற்றுக்கிழமை மூல நட்சத்திரத்தில் அவதரித்தவரே மகான் ஞானகுரு ஆறுமுக சுவாமிகள். இளமையிலேயே ஆன்மிக நாட்டத்துடன் விளங்கிய சுவாமிகள் தன்னுடைய பெற்றோர்களின் விருப்பப்படி தொழில்கள் பல செய்து வந்தார். பெற்றோரிடம் தனக்கு திருமணம் வேண்டாம் என்று தெரிவித்து இல்லறத்தில் ஈடுபடாது துறவியாக மாறினார். பல ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பணிகள் செய்து வந்தார். அந்த ஊர் மக்கள் அவரை பல்வேறு பெயர்களால் அழைத்தனர். ஆறுமுக சுவாமிகள் , கண்ணனூர் சுவாமிகள் , உறையூர் சுவாமிகள் , கற்கண்டு சுவாமிகள் என பல பெயர்களில் அழைத்தனர் .
நாகர்கோவிலில் சிவனை நினைத்து தவம் மேற்கொண்டார். அதற்குப்பின் அஷ்டமாசித்துக்கள் ,நவகண்ட யோகம் போன்ற கலைகளும் கைவரப் பெற்றார். தேவையின்றி சித்துக்கள் எதையும் பயன்படுத்த மாட்டார்கள். மக்கள் படுகின்ற துன்பங்களை நீக்குவதற்காகவும், அவர்களை இறை நிலைக்கு அழைத்துச் செல்வதற்காகவும் மட்டுமே சில சித்துக்களை செய்தார்கள்.
சுவாமி தனித்தன்மை வாய்ந்தவர். அபூர்வ ஆன்மாவாக விளங்கினார். ஒரே உருவத்துடன் பல்வேறு ஊர்களில் உள்ள அன்பர்களுக்கு ஒரே நேரத்தில் காட்சி அளித்துள்ளார். நேர் முகமாகவும், மறைமுகமாகவும் , கனவின் மூலமும் காட்சியளிப்பார். சுவாமிகள் வைகாசி மாதம் 30ஆம் தேதி 1966 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை காலை (13.06.1966) பரிபூரணமானார்கள் .
சமாதி அமைந்துள்ள இடம் :
திருச்சி , உறையூர் , எண் 49/13 , 'காவல்காரத்தெரு' என்ற இடத்தில் "ஞானகுரு ஆறுமுகதேவ் குடில் " என்ற பெயரில் இருப்பிடம் அமைந்துள்ளது ....

ConversionConversion EmoticonEmoticon