இன்றைய கோபுர தரிசனம்

அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத பெருமாள் திருக்கோவில்...!
"'வெள்ளை கோபுரம்''.
கோவில் தகவல்கள்
மூலவர் - அரங்கநாதர்
உற்சவர் - நம்பெருமாள்
தாயார்
- அரங்கநாயகி
தலவிருட்சம்
- புன்னை மரம்
தீர்த்தம்
- சந்திர தீர்த்தம் காவிரி தீர்த்தம் உட்பட எட்டு தீர்த்தங்கள்.
ஆகமம்
- பாஞ்சராத்திரம்.
சிறப்பு
- வைகுண்ட
ஏகாதேசி.
திருவிழாக்கள்
- பிரம்மோற்சவம்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெற்கு பகுதியில் ஆசியாவிலேயே உயரமான 13 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
இது தவிர வடக்கு கோபுரம், கிழக்கு கோபுரம், ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம், சன்னதி கோபுரங்கள் உள்பட கோவில் வளாகத்தில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன.
கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரம் வெள்ளை கோபுரம் என அழைக்கப்படுகிறது.
இந்த கோபுரமானது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் அமைந்து உள்ளது.
12 ம் நூற்றாண்டில் மாறவர்ம பாண்டியன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தங்கத்தால் கூரை வேய்ந்தான். 13 ம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பு நிகழ்ந்தது.அப்போது ஸ்ரீரங்கம் கோவில் நாசப்படுத்தப்பட்டது. மாலிக்காபூரின் தளபதி ஒருவனை வெள்ளையம்மாள் தன் நடனத்தால் மயக்கி, அவனை இந்தக்கோபுரத்தின் மாடத்துக்கு அழைத்துச் சென்றாள்.அங்கே இருந்து அவனை கீழே தள்ளி விட்டு தானும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அவளின் தியாகத்தின் அடையாளமாக இந்த கோபுரம் மட்டும் இன்றும் வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
தல வரலாறு
திருவரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். இராமர் அச்சிலையை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான், பின்னர் விபீஷணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக்கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். அங்கு சோழ நாட்டை ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒரு கிளியின் உதவியுடன் கோவிலை கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார், அக்கோவிலை புரணமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன். அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோவிலாக உள்ளது.
குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.
ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.
ஸ்ரீரங்கம்
திருச்சி மாவட்டம்
இனிய காலை வணக்கம்🙏💐
சித்தி பெற்றவர்கள் என பொருள்படும் சித்தர்கள் பற்றி இதுவரை அறியாச்சிறையில் கிடக்கும் அரிய பொக்கிஷங்களை நம் சிந்தையில் செம்மையாக உறைய வைக்க உதவுவதே இவ்வலைதளம்.அஷ்டமா சக்திகளை அடைந்த அஞ்ஞானிகளை பற்றி நம் மெய்ஞானம் உணர எங்கள் கேள்வி ஞானம் மூலம் நாங்கள் அறிந்ததை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.உங்கள் அறிவு எங்கள் உயர்வு.தங்கள் பகிர்வு எங்கள் பலன்.எனவே பகிருங்கள் உயர்கிறோம்.
ConversionConversion EmoticonEmoticon