ஒவ்வொரு ஆலயத்திலும் ஸ்தலமரம் என்று இருப்பது ஏன்?
பழைய காலத்தில் தீர்த்த விஷேசம் உள்ள இடங்கள், இறைவன் காட்சியருளிய இடங்கள், தேவர்கள், முனிவர்கள் தபசு செய்த இடங்கள் ஆகியவற்றில்தான் கோயில்களைக் கட்டினார்கள்.
மரங்களுக்கு அடியிலிருந்து, சுயம்புவாக சிவ லிங்கங்கள் தோன்றிய வரலாறுகளும் உண்டு. எந்தெந்த மரங்களின் அடியில் இருந்து, என்னென்ன மந்திரங்கள் உச்சரிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் நூல்கள் குறிப்பிடுகின்றன.
எந்தெந்த மரத்துக்கடியில் இருந்து முனிவர்கள், தேவர்கள் தவம் செய்தார்களோ, யோகிகள் சித்தி அடைந்தார்களோ, எந்த மரத்தின் அருகில் இறைவன் காட்சி கொடுத்தானோ அந்தந்த மரங்கள் ஸ்தல விருட்சங்களாக வணங்கப்பட்டு வருகின்றன.
ConversionConversion EmoticonEmoticon