இன்றைய கோபுர தரிசனம்

 

கோபுர தரிசனம் 

 புதன்கிழமை. – 05.01.2022               

 அருள்மிகு எட்டுக்குடி - முருகன் திருக்கோவில்

எட்டுக்குடி,

நாகப்பட்டினம் மாவட்டம்.



 

இப்பகுதி சோழ மன்னரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அப்போது, தன் நாட்டைக் காக்கும் வகையில் முருகன் சிலையை வடிவமைக்கும் படி மன்னர் சிற்பிக்கு உத்தரவிட்டார். சிற்பியும் கலைநயமிக்க முருகனை சிலையாக வடிவமைத்துக் கொடுத்தார். மிகுந்த அழகுடன் காணப்பட்ட அந்த முருகன் சிலையைக் கண்ட மன்னர், இதே போன்று இன்னொரு சிலையை சிற்பி செய்து விடக்கூடாது என, சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டார். இந்த சிலை தான் தற்போது சிக்கல் கோவிலில் உள்ள சிலை.

 கட்டை விரல் வெட்டப்பட்ட நிலையில் சிற்பி அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்று அங்கு முருக பெருமானை வேண்டி தான் முன்பு செய்த அதே சிலையை போல் முருகன் சிலையை வடிவமைக்க, உயிர் ஓட்டமிக்க கல்லை தேர்வு செய்து, மீண்டும் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அச்சிலை உயிர்த்துடிப்புடன் அமைந்து ஆறுமுகனின் உடலில் அக்னி ஜூவாலையும் உண்டானது. 

அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார். திடீரென சிலைக்கு உயிர்வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்கத் தொடங்கியது, அப்போது இக்கிராமத்தை ஆண்டுவந்த முத்தரசன் என்ற குறுநில மன்னன் அச்சிலையைப் பார்வையிட்டார். மன்னர் காவலாளிகளை பார்த்து அந்த மயிலை ' எட்டிப்பிடி ' என்றார். எட்டுப்பிடி என்ற பெயர் தான் மருவி பின்பு எட்டுக்குடி ஆனது. மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல் செய்ததும் மயில் பறப்பது நின்றதாம். 

முருகனே நேரில் நிற்பது போல தோற்றம் கொண்ட அந்த முருகன் சிலைக்கு அங்கேயே மன்னர் கோவிலைக் கட்டினார். இந்த முருகன் சிலைதான் எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோவிலில் இன்றும் உள்ளது. தற்போதும், அச்சிலையில் இருந்து இரத்தம் வெளியேறுவதாக நம்பப்படுகிறது..

 

இனிய காலை வணக்கம்🙏💐

Previous
Next Post »